சர்வீஸ் சாலைக்கு டெண்டர் விடப்படாத நிலையில் மேம்பால பணியை தொடங்குவதால் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடையூறு ஏற்படும் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ குற்றச்சாட்டு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 26 January 2024

சர்வீஸ் சாலைக்கு டெண்டர் விடப்படாத நிலையில் மேம்பால பணியை தொடங்குவதால் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடையூறு ஏற்படும் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ குற்றச்சாட்டு.


மதுரை மாவட்டம் திருமங்கலம் விமான நிலைய சாலையில் ரூபாய் 33.70 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பால பணிகளுக்காக நேற்று பூமி பூஜை நடைபெற்றது. விழாவில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளபதி உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர். ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மேம்பால பணிக்காக பூமி பூஜை போடப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது முறையாக ரயில்வே மேம்பால பணிக்காக பூமி பூஜைகள் நடைபெற்றது. 

இந்த நிலையில் மேம்பாலம் அமைய உள்ள இடத்தில் திருமங்கல சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் ஆன ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார். மேம்பால பணி குறித்து  நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் அவர்களிடம் திட்டத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருமங்கலம் விமான நிலைய சாலை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். 


மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை வைத்த நிலையில் திமுகவினர் ஆட்சியில் இருந்தபோது எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா 110 விதியின் கீழ் 74 கோடி மதிப்பீட்டில் காமராஜபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார் தொடர்ந்து அதற்கான வேலைகளை அதிமுக அரசு செய்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிக்கான அரசாணை நிலம் கையேகப்படுத்துவதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. 


2021 பிப்ரவரி மாதம் பூமி பூஜை நடைபெற்ற நிலையில் தொடர்ந்து ஆட்சி மாற்றம் நடைபெற்றதால் திமுக அரசு மேம்பால பணியை கிடப்பில் போட்டுவிட்டது. தற்போது அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்களை நீக்கிவிட்டது. 74 கோடி ரூபாய் என்ற மதிப்பீட்டை குறைத்து 33.70 கோடி ரூபாயில் புதிய திட்டத்தின் ரயில்வே மேம்பால கட்டப் போவதாக தெரிவித்துள்ளனர். புதிதாக மேம்பாலம் கட்டும் பணி தொடங்க உள்ள நிலையில் திருமங்கலம் விமான நிலைய சாலையில் வசிக்கக்கூடிய மக்கள் சென்று வருவதற்காக இணைப்பு சாலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்‌ மேலும் பாலம் கட்டும் பணியை தொடங்குவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக உள்ளனர். மேலும் இணைப்பு சாலை அமைப்பதற்காக டெண்டர் விடப்படாத நிலையில் இப்பணியை தொடங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad