நான் முதல்வன் திட்டம் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 30 January 2024

நான் முதல்வன் திட்டம் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு.


தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வாக அரசு பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை கல்லூரி களப்பயணம் நிகழ்வானது கடந்த ஆண்டு முதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் இருந்து 1200 மாணவர்கள் கல்லூரி களப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் கல்லூரி களப்பயண நிகழ்வானது 110 பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் 3200 மாணவர்களை கல்லூரி களப்பயணத்திற்கு பல்வேறு கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றது.  இன்று 30.01.2024 மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு ஆறு அரசு பள்ளிகளில் இருந்து 185 மாணவர்கள் கல்லூரி களப்பயணத்திற்கு சென்றனர்.


கல்லூரி களப்பயணத்தின் போது மாணவர்கள் கல்லூரி வளாகம், ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள், விளையாட்டு அரங்கங்கள், விடுதி வசதிகள் மற்றும் பல வசதிகளை பார்வையிட்டனர். மேலும் கல்லூரி சார்பில் பொறியியல் துறையில் மாணவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள், தமிழக அரசின் இட ஒதுக்கீடுகள், உயர்கல்வி பயில்வதற்கான மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும்  சரியான கல்லூரியினை தேர்வு செய்வது பற்றியும் மாணவர்களை ஊக்குவிக்கப்பட்டது.


இததிட்டதின்  விளைவாக மாணவர்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள், கிராமப்புற மாணவர்கள் என அனைத்து தரப்பு மாணவர்களும் தங்களின் எதிர்கால கனவுகளை நனவாக்கும் வகையில் உயர்கல்வியினை தேர்வு செய்யவும் மற்றும் 100% உயர்கல்வி சேர்க்கைக்கும் இத்திட்டம்  வழிவகை செய்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad