மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் வடமாநில ஊழியரை பணிநீக்கம் செய்த நிர்வாகம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 30 January 2024

மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் வடமாநில ஊழியரை பணிநீக்கம் செய்த நிர்வாகம்.


மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவரிடம் அங்கு இருந்த டோல்கேட்டில் வேலை செய்யும் தனியார் வட மாநில ஊழியர் பார்க்கிங்கிற்கு கூடுதல் பணம் கேட்பதாக அந்த பயணி காணொளி ஒன்று வெளியிட்டு இருந்தார் இது குறித்து இன்று காலை விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் விமான நிலைய இயக்குனரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளதாகவும் அவர் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது எம்பி மாணிக்கம் தாகூர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மதுரை விமான நிலைய இயக்குனரின் அறிவிப்பு: சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் உடனடியாக பிரச்சினையை நிவர்த்தி செய்ததால், ஊழியர் வெளியேற்றப்பட்டார். தீர்மானத்தை உறுதிப்படுத்த AAI குழு இன்று மீண்டும் ஆய்வு செய்தது என்று பதிவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad