திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு வகையான வேளாண் விளைபொருட்களை 10.04 கோடிக்கு விற்று சாதனை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 30 January 2024

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு வகையான வேளாண் விளைபொருட்களை 10.04 கோடிக்கு விற்று சாதனை.


திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் இதுவரை 1236 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் இதுவரை 2764மெட்ரிக் டன் அளவுள்ள 43 வகையான வேளாண் விளைபொருட்கள் விற்று கொடுத்து சாதனை. சிவகங்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் என் எல் ஆர் ரக நெல் விற்று தரப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (30.01.2024) கீழ்க்கண்ட விளைபொருட்கள் இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டது.

  1. சிவகங்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 11765 கிலோ என் எல் ஆர் ரக நெல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 24.50 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 288243க்கு வர்த்தகம் நடைபெற்றது.
  2. செங்கப்படை கிராமத்தைச்  சேர்ந்த ஒரு விவசாயியின் 23092 கிலோ இருங்குச்சோளம் ஏலத்திற்கு வந்தது அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ 36.50 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 842873/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
  3. உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 4220 கிலோ RNR நெல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 29.11 க்கு விலை போனது. இதன் மூலம் 122844/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.     
  4. சேடப்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் திருமங்கலம்  உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியோரின் 28606 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ 23க்கு விலை போனது. இதன் மூலம் 658213/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
  5. உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 196 கிலோ கம்பு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 27 க்கு விலை போனது. இதன் மூலம் 5284/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.     


ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ1917457/- க்கு வர்த்தகம் நடைபெற்றது. இதுவரை திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 1236 விவசாயிகளின் 2764 மெ.டன் அளவுள்ள 43 வகையான வேளாண் விலை பொருட்களை 10.04  கோடிக்கு விற்று கொடுக்கப்பட்டது என்பது இருப்பிடத்தக்கது.


மேலும்  விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075லும் மேற்பார்வையாளரை 9600802823 லும் சந்தை பகுப்பாளரை 8754379755 லும் ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

No comments:

Post a Comment

Post Top Ad