மதுரை சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர் கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 19 December 2023

மதுரை சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர் கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி.

மதுரை மாநகராட்சி தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோவில் தெருவில், மழைநீர் குளம் போல தேங்கி பொதுமக்களும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும், அவதியுறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பல பகுதிகளில் இதே நிலைதான் இருக்கிறது.


மதுரை மாநகராட்சி சார்பில், குடிநீர் திட்டப் பணிக்களக்காகவும், பாதாள சாக்கடை பணிகளுக்காகவும் ஆங்காங்கே தெருக்களில் பள்ளங்களை தோண்டி, குழாய்கள் பதித்துள்ளனர். அவ்வாறு பதிக்கப்பட்ட குழாய்கள் மேல் சரிவர மண்ணை மூடாததால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, மழை நீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல தேங்கியுள்ளன. மேலும், வடிகால் பகுதிகளில் குப்பை சேர்ந்துள்ளதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீரும் சாலையிலே சேறுகின்றன.


மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், வீரவாஞ்சி தெரு, அன்பு மலர்தெரு, காதர் மொய்தீன் தெரு, வள்ளலார் தெரு, கோமதிபுரம் அல்லி வீதி, தாழை வீதி உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே பள்ளங்களில் கழிவு நீரும் மழை நீரும் இணைந்து சிறிய குளங்கள் போல காட்சி அளிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் இப்பகுதிகளிலா செல்ல பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இதுகுறித்து, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், உதவி பொறியாளர் ஆகியோர் கவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றும், இதுவரை சாலையில் தேங்கிய நீரை அகற்ற ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. ஆகவே, மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இது பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


இதுகுறித்து, மதுரை அண்ணா நகர் சமூக ஆர்வலரும், மக்கள் நீதி மையத்தில் நிர்வாகியுமான முத்துராமன் கூறியது: மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் சித்தி விநாயக கோவில் தெருவில் பல மாதங்களாக இதே போல மழை நீரும் கழிவு நீரும் குளம் போல தேங்கியுள்ளன. இதுகுறித்து, இப்பகுதி மக்கள் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், சாலையில் குளம் போல தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாகவும், மதுரை ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்பட்டாலும், இதுபோல பல தெருக்களில் கழிவுநீரும் மழை நீரும் ஆங்காங்கே குளங்கள் போல தேங்கி, கொசு தொல்லை பெருகி வருகிறது. ஆகவே, மதுரை மாநகராட்சி மேயர் ஆணையாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad