தென் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய தனக்கனகுளம் மனிதநேய மருத்துவர்விஜய ராகவன். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 19 December 2023

தென் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய தனக்கனகுளம் மனிதநேய மருத்துவர்விஜய ராகவன்.


தென் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய தனக்கனகுளம் மனிதநேய மருத்துவர்விஜய ராகவன். உணவு, அத்தியாவசிய பொருட்கள், பாய், பழங்கள் உள்ளிட்டவை  புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியில் உள்ள 15ஆயிரம் பேருக்கு வழங்க ஏற்பாடு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் விஜயராகவன். 

போகோ சாரிட்டபிள் டிரஸ்ட் எனும் பெயரில் அறக்கட்டளை அமைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் வடகிழக்கு வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக பெய்த கன மழையில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட  மக்களுக்கு உதவும் விதமாக  சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில்  பத்தாயிரம் பேருக்கு உணவு மற்றும் 15 ஆயிரம் பேருக்கு தேவையான பாய் போர்வை, அத்திய வசிய பொருட்களான அரிசி, பருப்பு,பலசரக்கு, பிரட் பழம் , மெழுகுதிரி உள்ளிட்ட பொருட்களை தனது குழுவினருடன் தனக்கன்குளத்தில் உள்ள அழகர் மகாலில் இருந்து தயார் செய்து நேரடியாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வழங்க புறப்பட்டு சென்றார். 

இது பற்றி செய்தியாளர்களிடம் கூறிய டாக்டர் விஜயராகவன் பேரிடர் போன்ற கால நேரங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் எனது குழுவினர் மூலம் போகோ டிரஸ்ட் சார்பில் சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பில் உணவு மற்றும் பால் பவுடர் அத்தியாவசிய பொருட்கள் பழம் பிஸ்கட் பிரட் போன்றவற்றை வழங்க உள்ளோம். 


புயலால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு  எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். இதனை பார்த்து  மற்றவர்களும் பொது மக்களுக்கு உதவ வேண்டுகிறோம். தனக்கன்குளத்தை சேர்ந்த மனிதநேய மருத்துவர்  விஜயராகவன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக அரிசி, பருப்பு,, பால், பழம், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad