சோழவந்தான் பகுதி வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 19 December 2023

சோழவந்தான் பகுதி வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

சோழவந்தான் பகுதியில் உள்ளவைகைக் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு. அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் மேடானபகுதிக்கு குடியேற வருவாய்த்துறை பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையயில்வைகை அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் விடுக்கப்பட்ட உத்தரவின் பேரில் வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி, வருவாய் அலுவலர்கள் சோழவந்தான் கௌதமன், தென்கரைசதீஷ் ஆகியோர் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர், அந்தந்த ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர், ஊராட்சிசெயலர்,பணியாளர்கள் மற்றும் சோழவந்தான் பேரூராட்சிதலைவர் ஜெயராமன், சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் சோழவந்தான் மற்றும் இப்பகுதியில் வைகை கரையோரம்உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்குஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சோழவந்தான் பேரூராட்சி மற்றும் தென்கரை, முள்ளிபள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம், திருவேடகம், மேலக்கால் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலும் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதில் வைகை அணையில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், ஆற்றில் குளிக்கவும் மற்ற காரணங்களுக்காக இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றின் கரையோரங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பான இடங்களில்  தங்க வைக்கும் படியும் ஒலிபெருக்கிகள் மூலம்  எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோழவந்தான் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் கழிவுநீர் வாய்க்கால் அடைப்புகளை அகற்றி மழை நீர் செல்வதற்கு ஏதுவாக சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. சோழவந்தான் தீயணைப்புத்துறையினர் சோழவந்தான் மற்றும் காடு பட்டி போலீசார் உட்பட வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆகியோர வைகை கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.


புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் இருந்து, ஹெலிகாப்டர் மூலமாக பொதுமக்கள் மீட்கப்பட்டு, மதுரை விமான நிலையத்தில் மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad