கள்ளர்நாடு அறக்கட்டளை சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பத்தாம் மற்றும் பண்ணிரென்டாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அரசு கள்ளர் பள்ளிகளுக்கும் விருது வழங்கும் விழிப்புணர்வு விழா மதுரை ஆரப்பாளையம் தனியார் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவினை, மூத்த தி.மு.க உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம், தொழிலதிபர் சோலை ரவி குத்துவிளக்கு ஏற்றி துவிக்கி வைத்து, மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தனர். விழாவினை, கள்ளர்நாடு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வல்லாளதேவன், செயலாளர் பிரேம்குமார் ஏற்பாடு செய்திருந்தனர். கள்ளர்நாடு நிர்வாகிகள் மற்றம் மாணவ மாணவிகள் 1000 பேர் 33 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment