இந்த முகாமில் முதியோர் ஊக்கத்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, கூட்டுறவு துறை, சிறுபான்மை துறையின் சார்பாக தையல் இயந்திரம், வேளாண்மை துறை சார்பில் மானியம், தோட்டக்கலை துறை சார்பில் மானியம், கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுதிறனாளிகள் பிரிவு ஆகிய துறைகளுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில் வடகரை, மறவன் குளம்,மேலக்கோட்டை ஆகிய கிராமங்களில் 2,37,46560/_ மதிப்பீட்டில் 641பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வடகரை கவுன்சிலர் சோனியா விஜயன், வடகரை பஞ்சாயத்து தலைவர் மணி, வருவாய் திட்டம் துணை ஆட்சியர், செளந்தர்யா, வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, வட்டாட்சியர் மனேஷ்குமார், சமுகநலபாதுகாப்புதிட்ட வட்டாட்சியர் பார்த்திபன், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment