மார்கழி மாதம் முழுவதும் சிவாலயங்கள்மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இதில் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆருத்ரா தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. உத்தரகோசைமங்கை, சிதம்பரம் ஆகிய சிவாலயங்களில் விமர்சையாக நடைபெறும். இதேபோல் திருமங்கலத்தில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இன்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் சாமிக்கு 13வகை அபிஷேகங்கள் நடந்தேறியது.

சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் கூத்தாடும் நடராஜபெருமானாக பக்தர்களுக்கு காட்சி தந்தார்.திருவாசகம், திருப்பாவை, தேவாரங்கள் வாசிக்க பட்டு பூஜைகள் நடைபெற்றது.பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.பின்பு மீனாட்சி அம்பாளும் சொக்கநாதரும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.
No comments:
Post a Comment