மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா நினைவேந்தல் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ. ஆர் .ரவி தலைமை வகித்தார். கிளை செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒன்றிய செயலாளர் வி. பி. முருகன் நிறைவுரை ஆற்றினார். தகைசால் விருது பெற்ற சங்கரய்யா பெருமை குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் பேசினர் இதில் செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் எம். வி. பி ராஜா. திமுக விவசாய அணி பி.டி. மோகன், விவசாய தொழிலாளர் சங்கம் எம்.பி ராமன், அமமுக மணிகண்டன், தி.க சந்திரன், சிபிஐ விருமாண்டி, செல்லம்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment