மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை, தனியாருக்கு வழங்க கூடாது என, சாலமன் பாய்ப்பையா கையெழுத்திட்டு ஆதரவு - மதுரை எம்பி சமூக வலைதளத்தில் பதிவு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 16 November 2023

மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை, தனியாருக்கு வழங்க கூடாது என, சாலமன் பாய்ப்பையா கையெழுத்திட்டு ஆதரவு - மதுரை எம்பி சமூக வலைதளத்தில் பதிவு.

மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம், மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்க்க  நினைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக்கோரி, மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசரடி ரயில்வே மைதானம் முன்பு கடந்த நவ.,6 ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் என பலரும் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர்.


அதன் தொடர்ச்சியாக, நேற்று, பட்டிமன்றம் புகழ் சாலமன் பாப்பையா அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அதனை தனது சமூகவலைத்தளங்களில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷ்ன் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டு வீடியோவில் மக்கள்  சொத்துக்களை தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுப்பது நாட்டையே தனியாரு விற்று விடும் நிலை ஏற்படும் எனவும், பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ரயில்வே மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்கே விடுக்க வேண்டும் என ,சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad