திருமங்கலம் உசிலம்பட்டி விவசாயத்திற்கு 40 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 16 November 2023

திருமங்கலம் உசிலம்பட்டி விவசாயத்திற்கு 40 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, திருமங்கலம் தாலுகா விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி, கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று பேரணையில் இதற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இதில், திருமங்கலம் நீரினை பயன்படுத்துவோர் பாசன சங்கத் தலைவர் எம் பி ராமன், செயற்பொறியாளர் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு நீரினை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், திருமங்கலம் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள் பகவான் தியாகராஜன், தங்கராசு ,அப்துல் கலாம் அறிவியல்  சங்கத் தலைவர்  அபேல்மூர்த்தி, மதுரை மாவட்டக் குழு உறுப்பினர் ரெட் காசி, செல்லம்பட்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் மணிகண்டன், உதவி பொறியாளர் செல்லையா, சேகரன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சந்தனத் துரை, ஜெயக்குமார், விக்கிரமங்கலம் பகுதி பாசன குழு தலைவர் மூக்கன், மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பாசன சங்கத் தலைவர் எம் பி ராமன் கூறும் போது: கள்ளந்திரி கால்வாய் பகுதிக்கு ஒருதலை பட்சமாக நீர் திறக்கப்பட்டது . திருமங்கலம் கால்வாய்க்கு தண்ணீர் தாமதமாக திறந்தது மக்களை வேதனை அடையச் செய்தது.


அதனைத் தொடர்ந்து, மக்களின் போராட்டம் காரணமாக தற்போது அரசு தண்ணீர் திறந்து விட முடிவு செய்ய செய்தது. இருந்தாலும் பத்து நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்திருப்பது எங்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. ஆகையால், குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு  தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad