சமயநல்லூர் அருகே இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 17 November 2023

சமயநல்லூர் அருகே இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை


மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் அருகே மீனாட்சி குறுக்கு தெருவில் மதுரை தத்தனேரி பகுதியைச் சார்ந்த ராம்குமார் என்பவர் மர்ம நபர்களால்  தலை, மணிக்கட்டு, முகப்பகுதிகளில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். 25 வயது நிரம்பிய மணமாகாத இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மது விற்பனை செய்து வந்தார்.
 

மேலும் சமயநல்லூர் காவல் நிலையத்தில் இவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு  ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மது விற்பனையில் ஏற்பட்ட போட்டி காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற கொலையின் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 


காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியை அதிகப்படுத்தி இரவு நேரங்களில் நடமாடுபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad