சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீபிரளயநாத சிவாலயத்தில் சூரசம்ஹாரத்தையொட்டி அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 18 November 2023

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீபிரளயநாத சிவாலயத்தில் சூரசம்ஹாரத்தையொட்டி அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சூரசம் காரத்தையொட்டி, அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார், ஐயப்பன் ஆகியோர் பால் ,தயிர் ,நெய், வெண்ணெய் இளநீர் சந்தனம் திருநீறு தேன் பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு தீபாரதனை காட்டப்பட்டு, தேன் கலந்த திணை மாவு பிரசாதமாக வழங்கப்பட்டது. 


எம். வி. எம் .குழுமச் சேர்மன் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவர் டாக்டர் எம்.மருது பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, திருக்கோவில் நிர்வாக அதிகாரி இளமதி ,கணக்கர் பூபதி, உட்பட ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad