மதுரையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 17 November 2023

மதுரையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.


மதுரை சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மதுரை சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் செயற்பொறியாளர்  பாஸ்கரபாண்டி, தலைமையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது .

இந்த கூட்டமானது, காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, சுப்ரமணியபுரம், ஆரப்பாளையம், யானைகல், டவுன்ஹால் ரோடு,மகாளிப்பட்டி, மஹால், ஜான்சி, தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து மனு அளித்தார்கள்.


இந்த மனுவானது ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இம்முகாமில், உதவி செயற் பொறியாளர்கள் கந்தசாமி மற்றும் நவநீதகோபால் மற்றும் உதவி மின் பொறியாளர்கள் கவிதா வடிவேல்குமார் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad