விக்கிரமங்கலம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 17 November 2023

விக்கிரமங்கலம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.


சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அடுத்துள்ள தத்துவமசி ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில்  கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு, விக்கிரமங்கலம் உள்பட இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். இக்கோவிலின் குருநாதர் ஆர்.கே. சாமி, சிறுவர் பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். 

பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று கார்த்திகை முதல் தேதி முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் திரளாக வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். தினசரி, ஐயப்ப பக்தர்கள் பஜனை மற்றும் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்க உள்ளனர். 


இந்நிகழ்ச்சியில், விக்கிரமங்கலம் உள்பட இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர், இதே போல், சோழவந்தான் ஐயப்பன் கோவில், தென்கரை ஐயப்பன் கோவிலிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad