நேற்று மாலை இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்கவாணவேடிக்கையுடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் தலைமையில் யாகவேள்வி நடந்தது. நாகேஸ்வரன் பட்டர் மாப்பிள்ளை ஆகும், விக்னேஸ்வரன் பெண்வீட்டார் ஆகவும் இருந்து முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
இதில் செயல் அலுவலர் பாலமுருகன், ஆலயப் பணியாளர்கள், தொழிலதிபர் செந்தில்குமார் மற்றும் பிரதோஷ கமிட்டியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாங்கல்யபிரசாதம் வழங்கப்பட்டது. கல்யாணவிருந்து அன்னதானம் வழங்கினார்கள். இரவு சுவாமி அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.

No comments:
Post a Comment