மதுரை நகரில் பல இடங்களில், கழிவு நீர் சாலையில் பெருக்கெடுப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 20 November 2023

மதுரை நகரில் பல இடங்களில், கழிவு நீர் சாலையில் பெருக்கெடுப்பு.


மதுரை மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவில் பல நாட்களாக சாலையில் கழிவுநீர் உடைப்பு ஏற்பட்டு ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால், இப்பகுதியில் நடந்து செல்வோர் முகம் சுளிக்க வைக்கிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை நகரை பொறுத்தமட்டில், இதுபோல பல இடங்களில் சாலையிலே கழிவு நீர் உடைப்பு ஏற்பட்டு சாலையில் செல்வதால் சாலைகள் துர்நாற்றம் வீசுவதுடன், நோயில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்போது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மதுரை நகரில் மதிசியம், மேலமடை, கோமதிபுரம் தாசில்தார் நகர், வண்டியூர் ,யாகப்பா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கழிவு நீரானது சாலையிலே குளம் போல தேங்கியும், சில இடங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறதாம்.  இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், சாலையிலே ஓடும் கழிவு நீரை சீரமைக்க ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது. 


ஆகவே ,விரைவில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூக ஆர்வலர்கள் மதுரை மாநகராட்சி அலுவலகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad