தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மதுரை மண்டலம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம்பிக்கை மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், மறு சீரமைப்பு என்ற பெயரில் நம்பிக்கை மையங்களை மூடுவதை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரத போராட்டம் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில், மாநிலத் துணைத்தலைவர் மணிவாசகம் தலைமையில் நடந்தது, இதில், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ,தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பெண்கள் மற்றும் இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment