நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உயர்நீதி மன்ற மதுரை கிளை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 21 November 2023

நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உயர்நீதி மன்ற மதுரை கிளை.


புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது. பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.


மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 


மேலும் பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவாதிட்டார்.


இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad