இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கிராம சபை கூட்டத்தில் கூறினார்கள். அதன் அடிப்படையில் இன்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் நடந்த கிராம கூட்டத்தில் தங்களது கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மூன்று மடை உடைக்கப்பட்டதாகவும் மழை பெய்யும் காலங்களில் மக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் முன்னேற்ற ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி பஞ்சாயத்து தலைவரிடம் மனு கொடுத்தனர்.ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டியும் பட்டா வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.இப்போது கொடுக்கும் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் மனு கொடுத்தார்கள்.
No comments:
Post a Comment