திருமங்கலம் நகராட்சியில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவது சம்பந்தமாக விழிப்புணர்வு சுகாதார உறுதிமொழி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 5 October 2023

திருமங்கலம் நகராட்சியில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவது சம்பந்தமாக விழிப்புணர்வு சுகாதார உறுதிமொழி.

 

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும் தடுக்கவும் கீழ்கண்ட மருந்துகளை பயன்படுத்தி இயற்கையாக குணப்படுத்தும் பாரம்பரிய மருந்துகள் என்ற ஒரு தலைப்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவது சம்பந்தமாக விழிப்புணர்வு சுகாதார உறுதிமொழி ஏற்றனர். 


இதில் டெங்கு காய்ச்சலை தடுப்பதை பற்றி அரசு ஓமியோபதி மருத்துவர் கூறுகையில் மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தி செய்யும் தேவையற்ற பொருட்களில் இருந்து நாம் பாதுகாப்புடன் விழிப்புணர்வும் இருக்க வேண்டும் மேலும் ஆட்டுக்கல் பிளாஸ்டிக் கப் திறந்த வழி கிணறு திறந்த மேல்நிலைத் தொட்டி பூந்தொட்டி வாளி குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆகியவற்றில் நீர் தேங்காமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் அவ்வாறு நீர் தேங்கினால் கொசுக்கள் உற்பத்திக்கு ஏதுவாக அமையும் கொசுக்கள் உடைந்த பாத்திரங்கள் பாட்டில்களில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறியாக இருப்பதற்கு இந்த கழிவுநீர் உதாரணம் என்று கூறினார். 


அதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் உபயோகிக்கும் பொருள்களில் கழிவுநீர் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் அதற்கான வேண்டிய தடுப்பூசிகளையும் பப்பாளி இலை சாறு, நிலவேம்பு கசாயம், மலைவேம்பு கசாயம்,ஆகியவற்றை பருகி இந்த டெங்கு காய்ச்சலில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி ஆணையாளர் நகர்மன்ற உறுப்பினர்கள் அரசு ஹோமியோபதி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad