மேலும் எடப்பாடியார் ஆட்சியில் தான் திருமங்கலம் யூனியன் சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசு விருது பெற்று இதற்காக 25 லட்சம் ரூபாயை பரிசாக பெற்றது. அதேபோல் கல்லுப்பட்டி பேரூராட்சியும் சிறப்பு விருதினை பெற்றது. திருமங்கலம் நகராட்சிக்கு புதிய கட்டிடங்கள், கல்லூரி களுக்கு புதிய கட்டிடங்கள் உருவாக்கி தரப்பட்டது. அதேபோல் திருமங்க லத்தில் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது. அது கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் மக்களின் பிரதானமாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. மத்திய அமைச்சர் நிதி கட்காரி 6 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுங்க சாவடி அகற்றப்படும் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் சுங்க சாவடியை அகற்றுவோம் என்று முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தி ருந்தார். எடப்பாடியார் ஆட்சி காலத்தில் உள்ளூர் வானங்களை முறையாக கையாளும் வகையில் பல்வேறு சலுகைகள் பெற்று தரப்பட்டது.
ஏற்கனவே உங்கள் தொகுதி முதல்-அமைச்சர் என்ற திட்டத்தில் 10 கோரிக்கையில் இதுவும் பிரதான கோரிக்கையாக நான் கொடுத்துள்ளேன். கப்பலூர் டோல்கேட் குறித்து நான் மக்களிடம் மனுககளை வாங்கும் பொழுது ஒரு நாள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கும் நிலுவையில் தான் உள்ளது. தொடர்ந்து எதிர்கட்சி தொகுதிகளை பாராபட்சம் காட்டி வஞ்சிக்க கூடாது இது ஜனநாயகத்திற்கு அழகல்ல கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்க விட்டால் எடப்பாடியார் அனுமதியை பெற்று தமிழக அரசுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment