வருகின்ற (01.08.2023)ம் தேதி தமிழக முழுவதும் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் திமுக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ரஎங்கவஇலஆஸ் கல்யாண மஹாலில் கழக அவைத் தலைவர் வேலுச்சாமி தலைமையிலும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் காளிதாஸ், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் மு சி சோ ரவி, நகரச் செயலாளர் ராஜாமணி, விமல் ராஜ், தனபாண்டி, மணிவண்ணன், சிவா சசிகுமார் பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment