மேலும் உசிலம்பட்டி, தங்களாச்சேரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 6100 கிலோ கம்பு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 27 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 164700 க்கு வர்த்தகம் நடைபெற்றது. அடுத்ததாக நடுவக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 462 கிலோ செங்கட்டான் சோளம் ஏலத்திற்கு வந்தது.அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ 43 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 19862 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் தும்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 61 கிலோ மக்காசோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 23.50 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 1434 க்கு வர்த்தகம் நடைபெற்றது.
மேலும் விருதுநகர் மாவட்டம் சொக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 430.900 கிலோ பருத்தி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 60 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 25854 க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ 1057588 க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை 9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment