திருமங்கலம் மதுரை சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நகர் எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு குறைவாக இருப்பதால் இந்த சுங்கச்சாவடியை உடனடியாக நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொள்கிறோம்.
திருமங்கலம் மக்கள் அவதியுறும் வகையில் உள்ள வெளியூர் பேருந்து நிலையத்தினை விரைவில் கொண்டு வர வேண்டும். திருமங்கலம் ரயில்வே மேம்பால கட்டிட வரைபடம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் துவங்கப்படாமல் இருப்பதை விரைவில் செய்திட வேண்டும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும்.
இந்தியாவில் உள்ள அனைத்து டோல்கேட்டுகளிலும் மாற்றுத்திறனாளிகள் களுக்கு இலவசமாக செல்லலாம் என்று மத்திய அரசிடம் இருந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநில மாவட்ட மையத்தின் முழு ஒத்துழைப்புடன் பல ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தாலும் இன்னும் ஒரு சில ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை முடிவுக்கு வராமல் நிலுவையாகஉள்ளது. என்று கூட்டத்தில் தீர்மானம் ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தவர் முத்துராமலிங்கம் மாவட்டத் தலைவர் செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றியவர் பரமேஸ்வரன் மாநில கவுரவத் தலைவர் நன்றியுரை சோமசுந்தரம் கோட்ட பொருளாளர். ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment