பாலமேட்டில், கனி மாற்று திருவிழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 29 July 2023

பாலமேட்டில், கனி மாற்று திருவிழா.


மதுரை மாவட்டம், பாலமேடு வடக்கு தெரு பொதுமகா சபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார் சுவாமிக்கு, ஆடிவெள்ளியை முன்னிட்டு கனிமாற்று விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பழ கூடையினை ஏந்தி, பாலமேடு வடக்கு தெருவில் இருந்து நடை பயணமாக 2 கிலோமீட்டர் சென்று அய்யனார் கோவில் அடைந்து அங்கு சுவாமிக்கு கனிமாற்று விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, வடக்கு தெரு பொது மகாசபை கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பாலமேட்டில், ஆண்டுதோறும், அய்யனார் சுவாமிக்கு கனி மாற்று திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மாதங்களில், கிராம தேவதைகளை பொதுமக்கள் சிறப்பாக பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். அம்மன் கோயில்களில், ஆடி வெள்ளிக்கிழமைகளில், கூழ் காய்ச்சி அம்மனுக்கு வேப்பிலை வைத்து படைத்து, பக்தர்களுக்கு கூழை பிரசாதமாக கோயில் நிர்வாகத்தினர் வழங்குவர். 

No comments:

Post a Comment

Post Top Ad