சோழவந்தான் அருகேகாடுபட்டி திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 3 July 2023

சோழவந்தான் அருகேகாடுபட்டி திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்.


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேகாடு பட்டி கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க திரௌபதை அம்மன் கோவில் திருக்கல்யாணம் நடைபெற்றது திருக்கல்யாண விழாவை முன்னிட்டு அர்ஜுனன் திரௌபதி அலங்காரமாகி கோவிலை வலம் வந்தனர் மேளதாளத்துடன் மாப்பிள்ளை பெண் அழைப்பு நடைபெற்றது இதைத் தொடர்ந்து யாக பூஜை நடைபெற்று தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூல நாதர் சுவாமி கோவில் அர்ச்சகர் நாகேஸ்வர சிவம் மாப்பிள்ளை விட்டாராகும் பெண் வீட்டார் கார்த்திகேயன் ஆகவும் இருந்து அர்ஜுனன் திரௌபதி திருமணத்தை நடத்தி வைத்தனர்.


சிறப்பு பூஜை நடைபெற்று திருமண நலுங்கு நடந்தது இதைத் தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை மகா தீபாரதனை நடைபெற்றது அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது இதில் கோவில் பூசாரி பாலு முதலியார் முருகன் மன்னாடிமங்கலம் ஜெய்மா பள்ளி தாளாளர் கீதா துரைப்பாண்டி கௌரி  குடும்பத்தார் ராமு பாப்பாத்தி குடும்பத்தார் மற்றும் பங்காளிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர், தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது காடு பட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad