மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு மது போதையில் பெண் மற்றும் பொதுமக்களை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட அப்பா அம்மா மகன் ஆகிய மூன்று பேரை கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற இருவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் விக்கிரமங்கலம் மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில் ஒரே பதட்டம் போலீசார் குவிப்பு சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு பட்டி பகுதியில் நேற்று முன்தினம்இரவு இரு பிரிவினருக்கும் அடிதடி தகராறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கம்பாலும்ஆயுதங்களாலும் தாக்கி கொண்டனர். இதில்4 பேர் காயம் பட்டதாகவும் இதில் சிந்தாமணி என்பவர் படுகா ஏற்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வடகாடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிந்தாமணி புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தகராறில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி கொலை முயற்சி ஈடுபட்ட சேகர் சித்ரா தமிழ் வர்ணன் ஆகிய அப்பா அம்மா மகன் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.இச்சம்பவத்தால் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு செய்து வருகின்றனர். இளைஞர்களை சீரழிவை ஏற்படுத்தக் கூடியதை போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வீடியோ பரவலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சம்பந்தப்பட்ட தமிழ் வர்ணன் மற்றும் தமிழ்வாணன் ஆகிய இருவரையும் இதுவரை கைது செய்து நடவடிக்கை எடுக்காதாலும் படுகாயம் ஏற்பட்ட சிந்தாமணிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காததால் விக்கிரமங்கலம் மற்றும் வடகாடுபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விக்கிரமங்கலம் மதுரைமெயின் ரோட்டில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் காடுபட்டி விக்கிரமங்கலம் போலீஸ் படையுடன் சென்று மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இருவரை கைது செய்தும் சிகிச்சையில் இருக்கக்கூடிய சிந்தாமணிக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவாதம் கொடுத்ததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர் இருந்தாலும் அக்கிராமத்தில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காடுபட்டி, விக்கிரமங்கலம், சோழவந்தான் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருபவர்களை கண்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment