மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல் நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக அரசு பொது தேர்வில் 10. 12வகுப்புகளில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்தவிழாவிற்கு, தலைமை ஆசிரியர் விஜயக்குமார் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் கண்ணன், துணைத் தலைவர்கள் செந்தாமரைக்கண்ணன், பரணிராஜா. பொருளாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ராமராஜ் வரவேற்றார். இந்தவிழாவில், முதல்பரிசு சாலினி, சரவணக்குமார், இரண்டாம் பரிசு சுபஸ்ரீ, காவியா மூன்றாம் பரிசு கௌசல்யா, கோகுல் ஆகியோருக்கும் சிறப்புபரிசாக கணக்கு பதிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவி கௌசல்யாவுக்கு வழங்கப்பட்டது.
இதில், சங்க நிர்வாகிகள் கமலபதி, காசிலிங்கம், ராஜேந்திரன், பாலசந்திரன், ஜெயக்குமார், இன்னாசியர், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை, இணைச் செயலாளர் லெட்கர்கான் தொகுத்து வழங்கினார். முடிவில், உடற்கல்விஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment