தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், தெற்கு பெத்தாம்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை மற்றும் தயாரிப்பு கூடம் மற்றும் புதிய நியாயவிலை கடை கட்டிடத்திற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
உடன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா ,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், காவனூரி்ல் புதிய ஊராட்சி மன்ற கட்டடம், புதிய நியாயவிலை கடை மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
No comments:
Post a Comment