பாலமேட்டில் இரத்த தான முகாம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 30 July 2023

பாலமேட்டில் இரத்த தான முகாம்.


மதுரை மாவட்டம், பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, மற்றும் ஏ.வி.பி. குழுமம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, ஏ.வி.பி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பார்த்திபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 

பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், முன்னிலை வகித்தனர். இரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், முகாமை ஒருங்கிணைத்தனர். இந்த இரத்த தான முகாமில், சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு, இரத்த தானம் வழங்கினர். பின்னர், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சாலைகளில் இரத்தத்தை வினாக்காதீர் எனவும், இரத்த தானம் வழங்குவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad