திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உசிலம் பட்டி சந்திப்பு அருகே சென்றபோது, மோட் டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதனை நிறுத்தமுயன்றும் முடியாததால் இறுதியில் அருகிலிருந்த வழிகாட்டி பலகை–யில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற அய்யனார் குடும்பத்தினருடன் தூக்கி வீசப்பட்டார். இதில் அய்யனார் மற்றும் அவரது மகள் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த அந்த பெண் மற்றும் அய்யனாரின் மகன் இருவரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையும் படியுங்கள்: தக்காளி திருட்டை தடுக்க தோட்டத்தில் வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள் இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment