வணிகர்களுக்கு வங்கிச் சேவைகளை எளிமையாக்கும் ஏஸ்மணி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 13 July 2023

வணிகர்களுக்கு வங்கிச் சேவைகளை எளிமையாக்கும் ஏஸ்மணி.


வங்கி சேவைகளை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும், வணிக நிறுவனங்களுக்கும் செல்லும் வகையில் முன்னணி நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஏஸ்மணி புதிய ஆல்–இன்–ஒன் கட்டண கருவியை அறிமுகம் செய்துள்ளது. இது மைக்ரோ ஏடிஎம், ஆதார் ஏடிஎம் மற்றும் பொருட்களுக்கான சேவை கட்டணம் செலுத்தும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த கருவி வணிகர்களுக்கு சேவை கட்டணம் செலுத்தும் வசதியோடு பல்வேறு சேவைகளையும் வழங்குகிறது.

இந்த கருவிக்காக 250 ரூபாய் செலவு செய்யும் இல்லத்தரசிகள் மற்றும் வணிகர்கள் கூடுதல் மற்றும் நிரந்தர வருமானம் ஈட்டலாம் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது. டெபாசிட், பணம் திரும்பப் பெறுதல், உள்நாட்டு பணப் பரிமாற்றம், இருப்பு விசாரணை, கணக்கு திறப்பு, கடன் மற்றும் காப்பீடு, பில் செலுத்துதல் மற்றும் ரீசார்ஜ் மற்றும் பிற வங்கி அல்லாத சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு இந்த கருவி வழங்குகிறது. 




மேலும் கார்டு அடிப்படையிலான அல்லது ஆதார் அடிப்படையிலான நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்கும் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த கருவியில் பெரிய திரை மற்றும் தெர்மல் பிரிண்டிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.


இந்த புதிய கருவி குறித்து ஏஸ்மணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிமிஷா ஜே வடக்கன் கூறுகையில், இந்த கருவியில் எந்த வங்கிக் கார்டுகளையும் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டுகள் அல்லது ஆதார் கார்டுகளுடன் வணிகர்களை அணுகி தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கலாம். அதேபோன்று அவர்களது வங்கிக் கணக்குகளிலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். 


மேலும், அனைத்து வகையான ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்துவதற்கு வசதியாக இந்த கருவியில் பாரத் பில் கட்டண முறை வசதியும் உள்ளது. இந்த கருவி வணிகர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை வழங்குவதோடு, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்கும் என்று தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad