மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தில் கல்லணை புதூர் கீழ உப்பிலிகுண்டு, மேல உப்பிலிகுண்டு சின்ன உலகானி நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் அதிகமாக கல் குவாரிகள் செயல்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது விளைநிலங்களை சொற்பவிலைக்கு விற்றுவிட்டு கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் விவசாய நிலங்களில் வேலை பார்க்கும் பெண்கள் எந்த நேரத்தில் குவாரியில்லிருந்து வெடி வெடிக்கும் என்ற பயத்துடனும் அச்சத்துடனும் கூலி வேலைகளை பார்த்து வருகிறார்கள். மேலும் குவாரி உரிமையாளர்கள் தங்களது ஊருக்கு வரும் குண்டாறு பிரதான கால்வாயை அடைத்து சாலை ஏற்படுத்தியுள்ளதால் நீர்வரத்து மிகவும் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைவாக செயல்பட்டு கல் குவாரிகளை உடனடியாக ரத்து செய்து விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் இல்லையெனில் மிகப் பெரிய சாலை மறியல் போராட்டம் நடக்கும் என உறுதி அளிக்கிறோம் என்று கிராம பொதுமக்கள் அனைவரும் கூறினர்.
No comments:
Post a Comment