முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சூர்யா, பிரியதர்ஷினி, வெங்க டேஸ்வரி, பஞ்சவர்ணம், கீதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் துணைச் செயலாளர் சந்தனதுரை வரவேற்றார்.
இந்த விழாவில், மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தொண்டர்களுக்கு வேஷ்டி வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:- பல்வேறு தடைகளை சுக்குநூறாக தகர்த்து எறிந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மாவின் ஆசிகளோடு அண்ணன் எடப்பாடியார் மகத்தான சாதனையை இன்று படைத்துள்ளார். இந்த வெற்றி தொடர வேண்டும் என்று சொன்னால் இரண்டரை கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைந்து எடப்பாடியார் தலைமையில் சாதனை படைத்து காட்ட வேண்டும்.
அண்ணன் எடப்பாடி யார் தன்னை கிளை கழக செயலாளராக இணைத்துக் கொண்டார்கள். கடைக்கோடி தொண்டர்கள் தான் இயக்கத்தை தாங்கி பிடிக்க கூடிய ஆணிவேராக இருக்கக் கூடியவர்கள். இயக்கத்தை காக்கும் பொறுப்பு அவர்களுக்கு தான் உள்ளது. அதில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்படியாக தொண்டர்களுடைய ஆதரவோடு கழக நிர்வாகிகளுடைய ஆதரவோடு நிரந்தர பொது செயலாளராக உயர்ந்திருக்கிறார் என்று சொன்னால் உழைப்பால் உயர்ந்த உத்தமர். விசுவாசத்தின் அடையாளம் என்று நாடே போற்றுகிறது.
சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள் உலக அளவில் இருக்கிற பெரிய கட்சிகளின் பட்டியலை வெளியிட்ட போது. உலக அளவில் அ.தி.மு.க ஏழாவது இடத்தில் உள்ளது என்ற மாபெரும் சரித்திரத்தை படைத்துள்ளது. இந்திய அளவிலே மூன்றாவது பெரிய கட்சியாக ஜெயலலிதாவின் வழித்தோன்றலில் எடப்பாடியார் சாதித்து காட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து தாய் தமிழ்நாட்டிலே அதிக உறுப்பினர்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 75 நாட்களிலே பொதுச் செயலாளராக பொறுப்கிக்பேற்று முதல் கையெழுத்திட்டார்.
ஐந்தாம் தேதி 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட 75 நாட்களில்ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை தன்னச்சையாக சேர்க்கப்பட்டுள்ளதாக வரலாறு. இன்னும் பத்து நாட்களில் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக கிராமங்கள் தோறும் சாதனை படைத்து வருகிறோம். தேர்தல் கமிஷன் அங்கீகார அறிவிப்பு வந்ததை கேட்ட அண்ணா தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சி கடலில் நாடு முழுவதும் மூழ்கி இருக்கிறார்கள். ஆனால் ஒரு பக்கம் விலைவாசி உயர்வில் தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுப்பதற்காக கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் எடப்பாடி யார் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு அச்சாரமாக, ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார் எடப்பாடி யார் கோட்டைக்கு முதலமைச்சராக செல்கிறார் என்ற அறிவிப்பை இந்தியதேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது.
அந்த அறிவிப்புக்காக நாம் உன் உறக்கம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் பாடுபட வேண்டும் உழைக்க வேண்டும் மக்களை சந்திக்க வேண்டும். எடப்பாடியாரின் சாதனை, புரட்சிகரமான புரட்சித் தலைவியின் சாதனை, புரட்சித் தலைவரின் சாதனைகளை வீடு வீடாக எடுத்துச் சென்று ஒரு வெற்றி சரித்திரத்தை உருவாக்குவதற்கு அயராவது பாடுபட வேண்டும் என்று இந்த நல்ல நேரத்திலே உறுதியளித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் எம்ஜிஆர் மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன், வார்டு செயலாளர்கள் கோட்டையன், திருப்பதி, பாரத் சங்கு, ரங்கராஜ், வில்லி, பிரேம், பாண்டி, அழகர், ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூர்பேரவைசெயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment