இன்று முதல்(24.7.23) நடைமுறைப்படுத்தபடுகிறது. தமிழ்நாட்டில் முன்னோடி ஆய்வுக்காக 11 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஒன்றியங்களை தேர்வு செய்து முன்னோடி ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மதுரை மாவட்டத்தில் மேற்கு ஒன்றியம் முன்னோடி ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது, ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டம். இன்று முதல் மதிப்புமிகு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் சிறந்த ஆலோசனையுடன் 24.7.23.. முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
மதுரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் அவர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அமுதசெல்வி, ராணி குணசீலி .வாசிப்பு இயக்கத்தின் தன்னார்வலர்கள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கற்றலின் திறனறிந்து வாசிப்பு திறனுக்கு ஏற்ப நுழை ...நட... ஓடு....மற்றும் பற... என்ற 4 நிலைகளில் மாணவர்களுக்கு வாசிப்பு புத்தகங்கள் கொடுக்கப்பட்டு வாசிக்க வைக்கப்படும் நிகழ்வு தொடங்கப்பட்டது.முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட 53 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
சென்ற 21. 7.23 அன்று மதுரை மேற்கு ஒன்றியம் எல். பி .என். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கு ஒன்றியத்தைச் சார்ந்த அரசு ஆரம்ப... நடுநிலை... உயர்நிலை... மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்கள் 101 பேர் கலந்து கொண்ட வாசிப்பு இயக்கம் அறிமுக விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் மதிப்புமிகு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா. கார்த்திகா அவர்களின் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாசிப்பு இயக்கத்தின் மூலம் மதுரை மேற்கு ஒன்றியத்தில் உள்ள 101 அரசு பள்ளிகளில் படிக்கும் (4 முதல் 9 வகுப்பு). 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ.. மாணவியர்கள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment