கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகேயுள்ள சாஸ்தாநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சுஜித்(20). இதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் பிரபு(25). இருவரும் நண்பர்கள். கோவையில் தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் மீண்டும் கோவை செல்ல நேற்று நள்ளிரவு கன்னியாகுமரியிலிருந்து டூவிலரில் புறப்பட்டனர்.
வண்டியை பிரபு ஓட்டிவர சுஜித் பின்னால் அமர்ந்து வந்தார். இன்று அதிகாலை விருதுநகர் - திருமங்கலம் நான்குவழிச்சாலையில் ராயபாளையம் விலக்கு அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரி மீது டூவிலர் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே வாலிபர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர். வாலிபர்கள் மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த வாலிபர்கள் பிரபு, சுஜித் இருவரின் உடல்களை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்து நிற்காமல் சென்ற லாரியை தேடிவருகின்றனர்.
திருமங்கலம் வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழப்பு.
திருமங்கலம் அருகே நேற்று இரவு நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். மதுரை மாவட்டம் திருமங்கலம் மறவன்குளத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி,. இவரது மகன் குணசேகரன்(23). மனைவி தனலட்சுமி. குணசேகரன் நண்பர் இதே பகுதியை சேர்ந்தவர் முத்தையா(20). இவர்கள் இருவரும் நேற்று இரவு ஓட்டலுக்கு செல்ல இரவு 11 மணிக்கு டூவிலரில் மறவன்குளத்திலிருந்து திருமங்கலத்திற்கு வந்தனர்.
திருமங்கலம் விருதுநகர் ரோட்டில் ஆனந்ததியேட்டர் அருகே வந்த போது எதிரே ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் டூவிலரில் மோதியது. இதில் வாலிபர் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்தையா திருமங்கலம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்தவிபத்தில் உயிரிழந்த குணசேகரன் மனைவி தனலட்சுமி 8 மாதம் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மற்றொரு சம்பவம். டூவிலரில் மீது வேன் மோதி விபத்தில் கூரியர் ஊழியர் உயிரிழப்பு. மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள எஸ்.கண்ணாபட்டியை சேர்ந்தவர் செல்லச்சாமி மகன் முருகேசன்(34). திருமணம் ஆகவில்லை. மதுரையில் உள்ள கூரியர் நிறுவனத்தில வேன் டிரைவாக பணிபுரிந்து வந்தார். நேற்று பணிமுடித்து தனது டூவிலரில் பேரையூர் நோக்கி சென்றார். திருமங்கலம் ராஜபாளையம் ரோட்டில் முருகேசன் சென்ற போது பழைய ஆர்டிஓ அலுவலகம் அருகே எதிரே வந்தவேன் டூவிலரில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட முருகேசன் படுகாயமடைந்தார். மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
No comments:
Post a Comment