மதுரை நகரில், நாய்களை பிடிக்க மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்டுமா? - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 19 July 2023

மதுரை நகரில், நாய்களை பிடிக்க மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்டுமா?


மதுரை நகரில் தெருக்களி சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை நகரில் கடந்த சில மாதங்களாக, தெருக்களில் நாய்கள் தொல்லை பெருகி வருகிறது. தெருக்களில், செல்வோரை, விரட்டி கடிக்கவும், இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தவறி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.

மதுரை நகரில், புதூர், கே கே நகர், அண்ணா நகர், மேலமடை, கோமதிபுரம், தாசில்தார் நகர், வண்டியூர், கருப்பாயூரணி, உள்ளிட்ட பல பகுதிகளில் தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி தெரிகிறது. அவ்வழியாக நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தை சொல்பவரை விரட்டி கடிக்க வருவதால் பொதுமக்கள் பலர் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து, மதுரை மாநகராட்சி உரிய அலுவலரிடம் இப்பதி மக்கள் புகார் தெரிவித்தும், தெருக்களில், சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கொண்டு செல்ல ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது. 


ஆகவே, மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மாநகராட்சி லைசன்ஸ் இல்லாமல் தெருக்களி சுற்றி தெரியும் நாய்களை அதற்குரிய வாகனங்களை பிடித்து பொதுமக்களை காப்பாற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad