அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக சென்ற ஆண்டு2022..23 அக்டோபர் மாதம் முதல் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கலை ஆர்வம் கலைத்திறனை வளர்ப்பதற்காக கலையரங்க பயிற்சிகள் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களால் நடனம், வாய்ப்பாட்டிசை, காட்சிகலை, சிலம்பம், நாடகம் போன்ற கலைகளில் சிறந்த கலைஞர்களால் மதுரை மாவட்டத்தில் 154 பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த ஆண்டும் 2023-2024 மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் வழிகாட்டி நெறிமுறைகளின் படி, மற்றும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை படியும் முதற்கட்டமாக இன்று முதல் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பகுதி நேர கலை ஆசிரியர்கள், முழு நேர ஆசிரியர்கள் மூலம் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் கலையரங்க வகுப்புகள் மதுரை மாவட்டத்தில் 161 ஆசிரியர்கள் மூலம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மாவட்டம் T. கல்லுப்பட்டி ஒன்றியம் T. குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா. கார்த்திகா கலையரங்க பயிற்சிகள் தொடங்கப்பட்ட நிகழ்வு உடன் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி மாவட்ட திட்ட அலுவலர் கார்மேகம் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
No comments:
Post a Comment