மதுரை மாவட்டத்தில் மிகப்பெரியஆன்லைன் மோசடி கும்பல் கை வரிசை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 19 July 2023

மதுரை மாவட்டத்தில் மிகப்பெரியஆன்லைன் மோசடி கும்பல் கை வரிசை.


மதுரை மாவட்ட ஆன்லைன்ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பாக மதுரை மாநகர் காவல் ஆணையாளரிடம்மோசடி கும்பலை கைது செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு மதுரையில் கடந்த சில நாட்களாக வடநாட்டு கும்பல் ஒன்று ஆன்லைன் மூலமாக ஆட்டோ புக்கிங் செய்து தாங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டியதாக ஒரு மருத்துவமனையின் அடையாளத்தை சொல்லி அங்கு இருக்கிறார்கள்.

அவர்களை அழைத்து கொண்டு போய் வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறி தாங்கள் அக்கவுண்ட் நம்பரை கொடுங்கள் என்று ஓலா உபர்.ராபிடோ .செயல் மூலமாக தாங்கள் அக்கவுண்டுக்கு பணம்2500 ரூபாய் அனுப்பியதாக ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கிறார்கள் இதனை நம்பி ஆட்டோ ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்டவர்களை தேடி அவர்கள் சொன்ன இடத்துக்கு சென்று காத்திருந்து அப்படி யாரும் வரவில்லை என்று தெரிந்தவுடன்மீண்டும் அவர்கள் தொலைபேசி தொடர்பு கொண்டு அவர் வரவில்லை என்றால் தங்களுக்கு ஆட்டோ செலவு 500 ரூபாய் எடுத்துக் கொண்டு பாக்கி அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்கள்.


இவர்கள் வந்த SMSநம்பிபணத்தை திருப்பி அனுப்பி வைக்கிறார்கள்ஆனால் இவர்கள் கூகுள் பிளே மூலமாக பார்க்கும் போது பணம் ஏறவில்லை இவர்கள் பணத்தை தான் ஆட்டை போட்டு விடுகிறார்கள் அப்படி பணத்தை அனுப்பவில்லை என்றால் அங்கிருந்து போன் மூலம் தாங்கள் ரிட்டையர்டு ராணுவ அதிகாரி காவல்துறை அதிகாரி என்று மிரட்டி தாங்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்போம் என்று மிரட்டி பணத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.


இதுபோன்று மதுரையில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களிடம் இப்படி பணத்தை பரித்துள்ளார்கள் இதனால் பெட்ரோல் விலை உயர்வு அதிகமாக மக்கள் இலவச பேருந்துகள் செல்வதாலும் ஆட்டோ வாழ்வாதாரத்தை இழந்துள்ளது. ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. 

No comments:

Post a Comment

Post Top Ad