மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆ. கொக்குளம் கிராமத்தில், இன்று தமிழக அரசு உத்தரவின் பேரில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. தம் முகாமில் தேங்கல்பட்டி கிராமத்தில் ரூபாய் 2 கோடி செலவில் மின் மயானம் அமைய உள்ளதற்கு, பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை அரசு தவிர்க்க வேண்டும் என மனு அளித்தனர்.


தற்போது பல சமுதாயத்தினர்களுக்கு தனித்தனியாக சுடுகாடு உள்ள நிலையில், மின் மயானம் அமைத்தால் ஜாதி மத மோதல்கள் உருவாவதற்கும், பழைய சம்பிரதாயத்தை நடைபெற முடியாமல் இருப்பதற்கும் வழிவகை செய்யும் என்பதால் மின்மயானம் தேவையில்லை என பெரும்பாலான கிராம மக்கள் முகாமில் மனு அளித்தனர்.
மேலும் கிண்ணி மங்கலம் கிராமத்தில் விசேஷ நாட்களின் போது அனுமதி இன்றி அதிக சத்தம் ஒழிக்க கூடிய ஒலிபெருக்கிகள் வைக்கப்படுவதால், பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக மனு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment