நான் முதல்வன் கல்லூரி கனவு 2023 உயர்வுக்கு படி என்னும் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்வு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 3 July 2023

நான் முதல்வன் கல்லூரி கனவு 2023 உயர்வுக்கு படி என்னும் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்வு.


தமிழக பள்ளிக்கல்வித்துறையின் உன்னத திட்டங்களில்  ஒன்றான நான் முதல்வன் - கல்லூரிக் கனவு 2023 திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில்  2023  மே மாதம் 6 ஆம் தேதிமுதல் (பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுக்குப் பிறகு) அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் அந்தந்த பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும், உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வு அந்தந்த பள்ளியில் உள்ள வழிகாட்டல் குழுவினரால் வழிகாட்டல் நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் சிறந்த கல்லூரியில் சேர்க்கை செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நான் முதல்வன் கல்லூரி கனவு 2023 உயர்வுக்கு படி என்னும் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்வு முதல் கட்டமாக 26.6.23 அன்று மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரியில்  மாவட்ட ஆட்சித் தலைவர்  எம்.எஸ் சங்கீதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உயர்வுக்கு படி எனும் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வு இரண்டாம் கட்டமாக இன்று  03.07.23  மதுரை சமூக அறிவியல் கலைக் கல்லூரியில் மதுரை மண்டலத்தை சார்ந்த ஒன்றியங்களில்  உள்ள பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்து உயர்கல்வி  சேராத மற்றும் சேர்வதற்காக வழிகாட்டல் இல்லாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆலோசனையின் படி  மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி  தலைமையில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .கா. கார்த்திகா வரவேற்புரையுடன் முகாம் துவக்கி வைக்கப்பட்டது.


நான்முதல்வன் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்வில் மாவட்ட மதுரை மேற்கு மதுரை தெற்கு மதுரை வடக்கு வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஒன்றியங்களைச் சார்ந்த பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்கள் சுமார் 205 பேர்  மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உதவி ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கு கொண்டு உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகளையும் இன்றைய  அரங்கில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆலோசனைகளையும் பெற்று பயனடைந்தனர். 


இந்நிகழ்வின் சிறப்புரையாக மதுரை சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் மாவட்ட சமூக நல அலுவலர்... பட்டர் திறன் பயிற்சி உதவி இயக்குனர் மற்றும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிறைவு வழிகாட்டுதல் மைய துணை இயக்குனர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த வழிகாட்டல் அறிவுரைகளை உயர்கல்வி வழிகாட்டல் நெறியாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலன் அலுவலர் மாவட்ட திட்ட அலுவலர்,  TNSLRM  ஆலோசனை வழங்கினர் மேலும் மாணவர்களுக்கான வங்கி கடன் குறித்த தகவல்களை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் வழங்கினர்.


மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக முன்னாள் ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நிகழ்வில் பங்கு கொண்டனர். மேலும் மாவட்டத்திறன் பயிற்சி உதவி இயக்குனர்  நன்றியுரை  வழங்கினார். நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்வினை மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  மணிவண்ணன்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புள்ளியியல் அலுவலர்  பாலுசாமி . மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்  எம் செந்தில் குமரன் பிரேம் நேவிஸ்... மதுரை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய கலை சார்ந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வளர்கள், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த  முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒருங்கமைத்தனர்.


பல்வேறு வங்கி கிளைகளைச் சார்ந்த மேலாளர்கள் அரங்குகள் அமைத்து மாணவர்களுக்கு வேண்டிய கல்விக் கடன் சார்ந்த விவரங்களை   மாணவர்கள் பயனடையும் வகையில்  அமைத்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad