மதுரை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் அனைத்து ஊராட்சி மன்றங்களில் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 3 July 2023

மதுரை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் அனைத்து ஊராட்சி மன்றங்களில் நடைபெற்றது.


மக்கள் குறைதீர் கூட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுவது வழக்கம் இதில் சாலை வசதி குடிநீர் வசதி பாதாள சாக்கடை ஆகியவற்றுக்கான சிறப்பு குறைதீர்க்க கூட்டம் நடைபெறும். அதேபோல் இன்று மதுரை திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான ஆலம்பட்டி ஊராட்சி மன்றத்தில் சிறப்பு குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது.


இதில் திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஆலம்பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் அரசு பள்ளி ஆகியன ஆக்கிரமிப்புகளால் அகற்றப்பட இருக்கிறது இதை கருத்தில் கொண்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் லதா ஜெகன் அவர்களிடம் இன்று சிறப்பு குறைதீர் கூட்டத்தில் இதற்கான மனுவை ஊர் பொதுமக்கள் கொடுத்தனர். 


தீர்மானங்களும் ஏற்றப்பட்டது இந்த சிறப்பு குறைதீர்க்க கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad