மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் மற்றும் மதுரை திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூரண கிருஷ்ணன் மாணவர்கள் இடையே பேசும் பொழுது மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் போதைக்கு அடிமை ஆகிவிடக் கூடாது எனவும் தன் வாழ்க்கை மட்டுமல்லாது தனது குடும்பத்தின் வாழ்க்கையை சீரழித்து விடும் எனவும் மேலும் போதையில் யாரேனும் சக மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் கட்டாயமாக ஆசிரியரிடம் தெரிவித்து அவர்களை நல்வழி படுத்த நீங்களும் உதவ வேண்டும் எனவும் நாளைய தலைமுறை உங்கள் கையில் உள்ளது என்பதை யாரும் மறக்க கூடாது எனவும் என மாணவர்களிடையே பேசினார் மேலும் மாணவர்கள் பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.


No comments:
Post a Comment