இதன் தொடர்ச்சியாக இன்று 26.6.23 மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் .எஸ் சங்கீதா தலைமையில் மேலூர் கோட்டாசியர் பிர்தவ்ஸ் பாத்திமா மற்றும் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் ஊராட்சி முகமை சரவணன் முன்னிலையில். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா. கார்த்திகா வரவேற்புரையில் நான் முதல்வன் உயர்வுக்கு படி, வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.மேலூர் கல்வி மாவட்ட அளவிலான முகாமில் தெற்கு மேலூர், கிழக்கு. கொட்டாம்பட்டி ஒன்றியங்கள் சார்ந்த 370 க்கு மேற்பட்ட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் நிகழ்வில் பங்கு கொண்டனர்.
மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கு தேவையான விவரங்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் உயர் கல்வி வகுப்பை சேர வேண்டும் என்பதற்கான அத்துணை முயற்சிகளும் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டது மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மாவட்ட ஆட்சியர் .எஸ் சங்கீதா சிறப்பு உரை நிகழ்த்தி அவர்களுக்கு ஊக்கமூட்டினார். மேலும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு துணை இயக்குனர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்.. அரசு தொழில் பயிற்சி நிலைய துணை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலன் மகளிர் திட்ட குழு அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், போன்றோர் மாணவர்கள் உயர்கல்வி குறித்த வழிகாட்டல் உரை நிகழ்த்தினர்.


வங்கி கடன் குறித்த விளக்க உரைகளை மதுரை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நிகழ்த்தினார். மாணவர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பாளருமான உயர்கல்வி வழிகாட்டு நெறியாளர் திறன் மேம்பாட்டு கழகம் செந்தில்குமார் ஊக்க உரை நிகழ்த்தி இன்றைய நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். உயர்கல்வி சார்ந்த தகவல்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முன்னாள் ஐஐடி, பாலிடெக்னிக், கல்லூரி மாணவர்கள் சிறப்பாக மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினர். இறுதியாக நன்றியுரை உதவி இயக்குனர் மாவட்டத் திறன் பயிற்சி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டு நிகழ்வுகள் வழங்குவதற்காக பல்வேறு வங்கி கிளைகளைச் சார்ந்த மேலாளர்கள் அரங்குகளை அமைத்து மாணவர்களுக்கு வேண்டிய கடன் சார்ந்த விவரங்களை மாணவர்கள் பயனடையும் வகையில் அமைத்திருந்தனர், மேலும் வருகிற ஜூலை 2023 மூன்றாம் தேதி மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள சமூக அறிவியல் கல்லூரியில் மதுரை மேற்கு... மதுரை வடக்கு மதுரை அலங்கா நல்லூர் மதுரை வாடிப்பட்டி ஒன்றியங்களை சார்ந்த மாணவ மாணவியர்கள் பங்குபெறும் வகையில் கல்லூரி கனவு உயர்வுக்கு படி நிகழ்வு நடைபெற இருக்கிறது. முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரி படிப்பை இதுவரை தொடராமல் இம்முகாமில் கலந்து கொண்ட பின்னர் தொடர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment