திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 23 June 2023

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு.


திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் அகத்தர உறுதி மையம் இணைந்து மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், விவேகானந்த கல்லூரி அனைத்து மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சி ஆரம்பமானது.


தமிழ் துறைத் தலைவர் முனைவர் வி.கே. ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.  செயலர் சுவாமி வேதானந்த குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு விருந்தினர் கம்பம், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை தலைவர் மற்றும் நிறுவனர் கவிஞர் பாரதன் அவர்கள் முன்னோர்கள் சொன்னவை முத்தானவை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். நிறைவாக, முனைவர் இராமர் நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்வை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முத்தையா தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad