

இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை தொடக்க நிலை மற்றும் தனியார் பள்ளிகள்) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர்கள் அனைத்து ஒன்றியங்களை சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் என சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள எழுதப் படிக்க தெரியாதவர்lகள் எண்ணிக்கையில் 2022..23 ஆண்டில் முதல் கட்டமாக 18762 கற்போர்கள் தெரிவு செய்யப்பட்டு 934 மையங்கள் மூலம் எழுதப் படிக்க கற்றுத் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் (2023-2024) சென்ற ஆண்டு போல இரண்டாம் கட்டமாக 18762 எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கண்டறியப்பட்டு 934 மையங்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்பட உள்ளனர் என்பது சிறப்புக்குரியது.
No comments:
Post a Comment