சோழவந்தான் அருகே இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 23 June 2023

சோழவந்தான் அருகே இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், இந்து முன்னணி  சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, புறநகர் மாவட்டச் செயலாளர் தலைமை தாங்கினார், மாவட்ட நிர்வாகிகள் முத்துக்குமார், குணசேகரன், முன்னிலை வகித்தனர், ரங்கநாதன் வரவேற்றார்.

இதில், கலந்து கொண்டு இந்து முன்னணி  மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பரமணியம்  நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: பழனி முருகன் கோவிலில் தங்க தேர் இழுக்கும் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. இந்து கோவில்களில் கட்டணமில்லா தரிசனமுறையை அமல்படுத்த இந்து முன்னனி கட்சி பாடுபடும். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் கண்துடைப்பு செய்கிறார்.


கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு சொந்த பயன்பாட்டிற்கும் மசூதிக்கும்,சர்ச்க்கும் பாதை வேண்டும் என, நிலத்தை ஒப்படைக்கிறார்கள். எந்த பகுதியில் மசூதி, சர்ச் பகுதிகள் அதிக ஆக்கிரமிப்பு உள்ளது என, எங்களிடம் லிஸ்ட் உள்ளது. அது குறித்து பேசினால், அமைச்சர் சேகர்பாபு காதில் வாங்குவதே இல்லை. திமுக முதல்வர் ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார்.


அவரது மனைவி கோவில் கோவிலாக சென்று வழிபடுகிறார். மகன், மருமகன் கோவில் கோவிலாக சென்று யாகம் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்துக்களுக்கு எதிராகவே திமுகவினர் பேசி வருகின்றனர். இது ஏமாற்று வேலை  டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக இழுத்துமூடி கள்ளுகடைகளை திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திமுகவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்படவில்லை. திமுக காரர்களுக்கு எதிராக யார் பேசினாலும், உடனடியாக கைது செய்கின்றனர். அதை கண்டிக்கின்றோம் என்றார். கூட்டத்தில், அலங்காநல்லூர் சேவுகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad